» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பணவிரயம் : சட்டமன்ற பொதுக்கணக்கு குழு புகார்

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 9:02:54 PM (IST)தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் தேவையற்ற பணவிரயம் ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை புகார் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்), ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார்கோவில்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), தி.வேல்முருகன் (பண்ருட்டி), எம்.எச். ஜவாஹிருல்லா (பாபநாசம்) ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு, மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பஸ்நிலைய கட்டிடம் மற்றும் சாலைகள், எட்டயபுரம் ரோட்டில் உள்ள உயிர் உரம் உற்பத்தி மையம், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் ஆகிய இடங்களில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். 

கூட்டத்தில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ், வருவாய் அலுவலர் கண்ணபிரான், குழுவின் சிறப்பு பணி அதிகாரி எம்.எல்.கே.ராஜா, சார்பு செயலாளர் பால சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் குழு தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை உள்ளிட்ட சில மாநகரங்களில் பணிகள் கிடப்பில் போடப்பட்டு, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை நடந்து வருகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்து உள்ளார்கள். 

பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்காமலும், நிர்வாக ரீதியாகவும் பல தவறுகள் நடந்து உள்ளன. தூத்துக்குடி பஸ் நிலையத்தை பொறுத்தவரை போக்குவரத்து துறை இடத்தை முறையாக பெறுவதற்கு முன்பே பணிகளை தொடங்கி உள்ளனர். இதனால் தேவையில்லாமல் ஓராண்டு கால தாமதம், பண விரயம் ஏற்பட்டு உள்ளது. இதே போன்ற மற்ற துறைகளிலும் உரிய ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்வோம் என்று கூறினார்.


மக்கள் கருத்து

அதுAug 5, 2022 - 06:14:41 AM | Posted IP 162.1*****

எல்லாம் துட்டு மாநகராட்சி தான் காரணம் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory