» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் மோதி வாலிபர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 4, ஆகஸ்ட் 2022 8:33:34 AM (IST)

தூத்துக்குடியில் ரயில் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர் திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் காதர் மைதீன் (25) எனத் தெரியவந்தது. 

இவர் தனது தந்தையுடன் இணைந்து கேலக்ஸி பென்சிங் சர்வீசஸ் எனும் நிறுவனம் அமைத்து தொழில் செய்து வந்துள்ளார். தொழில் சம்பந்தமாக ஆர்டர் எடுத்து வருவதாக வீட்டிலிருந்து சென்றவர், நேற்று மாலை 4 மணி அளவில் தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார். இறந்தவரின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory