» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமய மாதா திருவிழா: ஆக.5ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செவ்வாய் 26, ஜூலை 2022 4:24:50 PM (IST)

பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு வருகிற ஆக.5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2022 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் 13.08.2022 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory