» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: தூத்துக்குடியில் கோலாகலம்!

செவ்வாய் 26, ஜூலை 2022 10:21:36 AM (IST)



தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். 

விழாவில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் பாதிரியார்கள், பேராலய நிர்வாகிகள், மற்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2ஆண்டுகளாக திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கொடியேற்றம் நிகழ்ச்சியில் 40ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா அன்னைக்கு பொன் மகுடம் சூட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 

இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த திருவிழாவையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதி அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.



மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. 11-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான குமார் ராஜா, உதவி பங்குத்தந்தை பால் ரோமன், களப்பணியாளர் பெல்கிளின்டன், மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து

பக்தன்Jul 26, 2022 - 03:40:49 PM | Posted IP 162.1*****

ஆகஸ்டு - 5 , 10 ம் திருவிழா….

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது

செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital












Thoothukudi Business Directory