» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணி நீக்கம் : தூத்துக்குடி எஸ்பி அதிரடி உத்தரவு!

திங்கள் 18, ஜூலை 2022 3:37:44 PM (IST)

பணியின் போது  சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவரை பணி நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்..

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் முன்னதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கடந்த 10.10.2019 அன்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோவில் பகுதிக்கு காக்கி சீருடையில் சென்று, அங்கு இருந்த சிறுமி மற்றும் அவரது காதலர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியபடுத்திவிடுவதாக மிரட்டி பணம் ரூ.5,000/- கொண்டு வர அறிவுறுத்தி சிறுமியின் காதலனை அனுப்பி விட்டு தனிமையில் இருந்த அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காவலர் சசிகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் மேற்படி காவலர் மீதான குற்றம் நிரூபனம் ஆனதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பு சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல் புரிந்துள்ள காவலர் சசிகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பணியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

m.sundaramJul 18, 2022 - 06:56:27 PM | Posted IP 162.1*****

good action

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory