» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.25கோடி கஞ்சா பறிமுதல் : டிரைவர் கைது

சனி 16, ஜூலை 2022 8:19:53 AM (IST)தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வந்த ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், தவமணி, தர்மராஜ் தலைமையிலான போலீசார் 4 பிரிவுகளாக பிரிந்து கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள சுனாமி காலனி கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக ஒரு கார் அதனை தொடர்ந்து ஒரு லாரி வந்தது. 

போலீசார் அதனை மறிக்க முயன்றனர். ஆனால் அந்த வாகனம் போலீசாரை பார்த்ததும் தப்பி சென்றனர். தொடர்ந்து போலீசார் அதனை விரட்டி சென்றனர். அப்போது சினிமா காட்சியை போல் கார் மற்றும் லாரி அருகே உள்ள உப்பளத்தில் இறங்கி சென்றது. போலீசார் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்தனர். எனினும் காரில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். லாரியை சோதனையிட்ட போது அதில் 450 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.25 கோடி ஆகும். லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர் சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு திருப்பாச்சேத்தி பகுதியை சேர்ந்த ஆண்டிசெல்வம் என்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பின்னர் மதுரையில் இருந்து லாரி மூலம் தூத்துக்குடி கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு அதனை கடத்தி செல்ல உட்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சா மற்றும் அதனை கடத்தி வரப்பட்ட லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி சென்ற காரில் வந்தவர்கள் யார்? இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory