» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா ஏற்பாடுகள் : அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆலோசனை

வியாழன் 14, ஜூலை 2022 5:51:48 PM (IST)தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவில் பக்தர்கள் அன்னையை நேரடியாக தரிசித்து வணங்கலாம் என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். 

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்ததாவது: நம்முடைய மேதகு ஆயர் நமது தூத்துக்குடி நகரில் அமையபெற்றுள்ள தமிழகத்தில் உள்ள 4 பெசிலிக்காவில் ஒரு பெசிலிக்காக இருக்கக்கூடிய பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 26.07.2022 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 05.08.2022 வியாழன் அன்று நிறைவு பெறும். தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொரோனா விதிமுறைமுறைகளை கடைபிடித்து நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. 

மேலும் திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திடவும், திருவிழா காலங்களில் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரப்பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்திடவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நாட்களில் மின்சாரம் தடையின்றி கிடைத்திட மின்சாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் தீயினால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க திருவிழா நடைபெறும் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திட தீயணைப்பு துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு இடையூறு இன்றியும், பொதுமக்களுக்கு சிரமமின்றியும் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிறுத்தப்பட்டுள்ளது. திருவிழா நாட்களில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலும், பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்திடவும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் திருவிழா கடைகளில் வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்கள், உணவுகள் தரமானதாகவும், பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதையும் உணவு நியமன அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொடியேற்றம் அன்று உலகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வார்கள். இத்திருவிழாவில் முறைப்படி கொடியேற்றத்துடன் எல்லா ஆராதனைகளும், தேர் பவனி, கொடி பவனி, நற்கருணை பவனி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை நேரடியாக தரிசித்து வணங்கலாம்.

திருவிழா நாட்களில் வழக்கமாக பேராயலத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடைபெறும். 26.7.2022 திங்கட்கிழமை அன்று காலை கொடியேற்ற வைபவம் நடைபெறும். அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள் உரை, அருள் இரக்க ஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணை ஆசிர் ஆகியன நடைபெறும். திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெறும். மக்கள் அரசின் கட்டளைகளுக்கு உட்பட்டு தனித்தனியாக வந்து தங்களது வழிபாட்டினை நடத்திக்கொள்ளலாம். 

எனவே இந்த ஆண்டு தமிழக அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பனிமய தாயின் பெருவிழாவை கொண்டாட வேண்டும் எனவும், உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், காவல் துறை, போக்குவரத்து துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

kumarJul 15, 2022 - 02:20:32 PM | Posted IP 162.1*****

Corona meendum athigamaga paravivarum ivvelayil arasu corona kattupadugalai theeviragmaga nadaimuraipaduthi makkalai kakka vendum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory