» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துறைமுகத்தில் வாலிபர் மரணத்திற்கு நிர்வாகமே காரணம் - சமக குற்றச்சாட்டு

ஞாயிறு 3, ஜூலை 2022 8:51:58 PM (IST)



தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மரணம் அடைந்த சம்பவத்தில் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என சமக குற்றம்சாட்டியுள்ளது. . 

தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவற்றப்பட்டது. அதில், தூத்துக்குடி புதிய துறைமுகம் ரெட்கேட் உள்ளே உள்ள கப்பல் தளத்தில் STARK எனும் கப்பலில் கடலுக்கு அடியில் சென்று பழுது நீக்கும் வேலையில் பியர்ல் ஷிப்பிங் நிறுவனத்தின் மூலம் இந்தியன் டைவிங் சர்வீசஸ் என்ற முறையான லைசன்ஸ் இல்லாத துணை ஒப்பந்தகாரர் மூலம் தூத்துக்குடி அண்ணாநகர் எட்டாவது தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சாம்ராஜ் (27) என்ற இளைஞர் மேற்படி கப்பல் பழுது நீக்க அழைத்து செல்லப்பட்டு கடலில் கப்பலுக்கு அடியில் மர்மமான முறையில் தலையில் இரத்த காயங்களுடன் இறந்துள்ளார். 

மேற்படி இளைஞர் டைவிங் படித்து கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் வேலை செய்வதற்கு லைசன்ஸ் பெற்றுள்ளார். அப்படிபட்டவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வெறும் 4 மீட்டர் ஆழத்தில் பணியின் போது மரணம் அடைந்துள்ளார். அவர் பணியின் போது பியர்ல்சிப்பிங் நிறுவனம் போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க தவறி உள்ளது. இப்படி பொறுப்பற்ற நிறுவனத்தின் செயல்பாடுகளை புதிய துறைமுகம் நிர்வாகம் கண்காணிக்க தவறிவிட்டது. 

அந்த இளைஞரின் மரணத்திற்க்கு புதிய துறைமுகம் நிர்வாகமும், பியர்ல்சிப்பிங் நிர்வாகமும், STARK கப்பல் நிர்வாகமும், இந்தியன் டைவிங் சர்வீஸ் நிர்வாகங்களே முழு பொறுப்பாகும். மரணமடைந்த இளைஞர் சாம்ராஜ் உடைய பெற்றோர் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்று திறனாளிகள் தனது ஒரே மகனை இழந்த பெற்றோர் எப்படி வாழ்வது நிலைகுலைந்து உள்ளனர். ஆகவே மாவட்ட என காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இது சம்பவத்தில் நேரடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் அருள்ராஜ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சிறப்புரையாற்றினார். மாநகர செயலாளர் உதயசூரியன் நன்றி உரையாற்றினார். 

தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், ரெக்ஸ், மாவட்ட பிரதிநிதிகள் பழனிவேல், பெரியசாமி, முருகேசன், இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், மாணவரணி செயலாளர் அகஸ்டின், வர்த்தகரணி செயலாளர் முத்துக்குமார், தொண்டரணி செயலாளர் முத்துச்செல்வம், விவசாய அணி செயலாளர் சரவணன், தொழிலாளரணி செயலாளர் ஜெகன், மீனவரணி செயலாளர் விக்ரம், மகளிரணி செயலாளர் குருவம்மாள், வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory