» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 3 யூனிட்டுகளில் உற்பத்தி நிறுத்தி வைப்பு

ஞாயிறு 3, ஜூலை 2022 8:27:36 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஐந்து யூனிட்டுள் உள்ளன். இதன்மூலம் தினமும் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்த அனல் மின் நிலையத்தில் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனல் மின் நிலையத்தில் 1 மற்றும் 5வது அலகுகளில்  மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 2, 3 மற்றும் 4வது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory