» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை: 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

வெள்ளி 1, ஜூலை 2022 5:40:00 PM (IST)

தூத்துக்குடியில் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.  இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று மாநகர் நல அலுவலர் அருண்குமார் தலைமையில் சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி பகுதி முழுவதும்  கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கும் தலா 2 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி பகுதி முழுவதும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 

ஓட்டல், டீக்கடை, மளிகை கடை, துணிக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளிலும் மாநகராட்சி அலுவலர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சுமார் 200 கிலோ எடை கொண்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், உணவு பொருட்களை பொட்டலமிடும் உறைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும். எனவே, வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

சொ.ராஜாJul 1, 2022 - 07:18:06 PM | Posted IP 162.1*****

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில் தடை செய்யப்பட்ட பிலாஸ்டிக் பொருட்கள் அல்லது பேப்பர் கப் உபயோகிப்பதை முதலில் தடுக்கப்படனும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory