» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வாலிபர் மர்ம சாவு : உறவினர்கள் போராட்டம் - பரபரப்பு

வெள்ளி 1, ஜூலை 2022 12:41:19 PM (IST)

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கடலில் மூழ்கி கப்பல் கம்பெனி ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அண்ணாநகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் சாம்ராஜ் (27). தனியார் கப்பல் கம்பெனியில் டைவிங் சர்வீஸ் ஒர்க் என்ற பணி செய்து வந்தார். நேற்று தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு அடியில் சென்று கப்பலில் சிக்கியுள்ள வலை உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். 

அப்போது எதிர்பாராத விதமாக மூச்சுத் திணறி அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி மறைன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த சாம்ராஜ் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது மரணத்திற்கான காரணம் எனத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துனர். சாம்ராஜ்க்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து நிச்சயம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

இவன்Jul 2, 2022 - 07:18:28 PM | Posted IP 162.1*****

சில மீனவர்கள் முட்டாள்.. மீன்பிடிக்க பயன்படுத்திய சில அறுந்துபோன வலைகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டுட்டு போவாங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory