» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிணையை மீறி குற்றத்தில் ஈடுபட்டவருக்கு சிறை

புதன் 29, ஜூன் 2022 6:34:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்டவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த கருத்தபாண்டி என்பவரது மகன் முத்துக்குமார் என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கடந்த மே 16 ம் தேதி அன்று கோவில்பட்டி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தில் முத்துகுமாரிடம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு வருட காலத்திற்கு குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்து அன்றைய தினமே பிணை பத்திரம் எழுதி பெறப்பட்டது.

ஆனால் பிணைப்பத்திர காலம் முடிவதற்குள் கடந்த 22 ம் தேதி அன்று கோவில்பட்டி கதிரேசன் கோவில் பகுதி அருகே  சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் முத்துகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முத்துகுமாரை வரும் 15.05.2023 வரை சிறையில் அடைக்க தண்டனை வழங்கி கோவில்பட்டி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory