» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது

புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் எலக்ட்ரிக்கல் கடையில் மின் மோட்டார் பம்பை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது மகன் சதீஷ்குமார் (32) என்பவர் திருச்செந்தூர் சபாபதிபுரம் தெரு பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ்குமார் கடையில் இல்லாத நேரம் அங்கு வந்த மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் பாலகுரு (37) என்பவர் சதீஷ்குமாரின் கடையில் எலக்ட்ரிக்கல் மோட்டார் பம்பை திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பெயரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ் மோகன் காந்தி வழக்கு பதிவு செய்து பாலகுருவை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் 3,000 மதிப்பிலான மின் மோட்டார் பம்பையும் பறிமுதல் செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital

Thoothukudi Business Directory