» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்

புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மீட்பு பிரசார பயணம் துவங்கியுள்ளது. 

இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் தொடக்க விழா நேற்று திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் எதிர்ப்புறம் உள்ள திடலில் நடந்தது. இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அரசுராஜா, இணை அமைப்பாளர் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கோட்ட தலைவர் தங்கமனோகர் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் பக்தவத்சலம் விளக்க உரையாற்றினார். சாமிதோப்பு அன்பாலயம் நிறுவனர் சிவச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டு இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணத்தை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ், துணைத்தலைவர் கார்த்திகேயன், மாநில பொது செயலாளர்கள் முருகானந்தம், கிஷோர்குமார், மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் குற்றாலநாதன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜீவ், நகர பொதுச்செயலாளர் முத்துராஜ், நகர தலைவர் மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன் நன்றி கூறினார்.

முன்னதாக, திருச்செந்தூர் கீழரதவீதி கோட்டாறு செட்டியார் மடத்தில் நேற்று காலை நடந்த யாகசாலை பூஜையில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து ெகாண்டார். பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்துக்களின் உரிமையை மீட்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 34 நாட்கள் இந்த பிரசார பயணம் மேற்கொள்ளப்படும்.. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். இந்து கோவில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அரசு மதசார்பற்ற அரசாக விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து கட்சியில் உள்ள இந்துக்களுக்காகவும் இந்து முன்னணி பாடுபடுகிறது. இந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை. பள்ளி கல்வி, திருமண சட்டம் என்று பல்வேறு வகையில் இந்துக்களுக்கு உரிமை இல்லை. அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக எதிர்க்கின்றன. மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் நமது மாநில அரசு எதிர்க்கிறது. மக்கள் எதிர்க்கவில்லை. ஜனாதிபதியாக பழங்குடியின பெண் வருவதை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

kumarJul 1, 2022 - 01:24:03 PM | Posted IP 162.1*****

Good. Arasu kovilgalai vittu veliyeravendum....kovil panathai kovilgaluku mattume selavuseyyavendum...

TN 69Jun 30, 2022 - 08:20:04 PM | Posted IP 162.1*****

கோயில் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும்

NAMA SIVAYAMJun 29, 2022 - 04:23:19 PM | Posted IP 162.1*****

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

ராமநாதபூபதிJun 29, 2022 - 10:13:13 AM | Posted IP 162.1*****

அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இவனுக தொல்லை தாங்க முடில. இதுல அரசு வெளியேறனுமாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory