» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர்: ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு

செவ்வாய் 28, ஜூன் 2022 8:59:01 PM (IST)

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர் வைத்த ஒப்பந்தக்காரர் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததனர்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி அண்ணாநகர் பகுதியில் ஸ்மார்ட் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சாலையோரத்தில் நடைபாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கொடை விழாவை முன்னிட்டு கோவில் அருகே விளம்பர பேனர் வைக்கப்பட்டு உள்ளது.

இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள நடைபாதையின் பேவர் பிளாக் தளத்தை சேதப்படுத்தி கம்புகள் நடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

இதன்பேரில் நகர்நல அலுவலர் அருண்குமார் மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், வருவாய் ஆய்வாளர் ஜான்சன் மற்றும் ஊழியர்கள் நேற்று தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள, பேனர் அமைத்த பந்தல் ஒப்பந்தக்காரரின் கடைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

SeenivasagamJun 29, 2022 - 05:45:26 PM | Posted IP 162.1*****

Political party banner ku ithu Pol seivergala

NARTHAJun 29, 2022 - 03:03:35 PM | Posted IP 162.1*****

super

kumarJun 29, 2022 - 01:18:59 PM | Posted IP 162.1*****

intha kattupadugalai parapatram illamal...arasiyal kathchiyinar meethum eduppergala??

ஏரியா காரன்Jun 29, 2022 - 10:29:23 AM | Posted IP 162.1*****

எல்லா தெருக்களில் மண்களை லாரியில் ஏற்றி விட்டு ஆட்டைய போட்டு போறாங்க , பனி முடித்த பிறகு எங்கேயோ கொண்டு வந்த சாக்கடை கலந்த மண் கொட்டி விடுகிறார்கள், மரம், செடி வளர்க்க இடம் இல்லாமல் ஆகிவிடுவார்கள் மாநகராட்சி துட்டு பயலுக.

VINOTHJun 29, 2022 - 09:49:15 AM | Posted IP 162.1*****

WELL DONE!

RajanJun 29, 2022 - 07:32:39 AM | Posted IP 162.1*****

தொடர்ந்து இது மாதிரி கட்டுப்பாடு இருந்தால் நன்றாக இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory