» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

திங்கள் 27, ஜூன் 2022 4:33:17 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: ஸ்டெர்லைட் ஆலை விற்பனை என்பதில் சூழ்ச்சி உள்ளது. எனவே தூத்துக்குடியில் தாமிர உற்பத்திக்கு எந்த ஒரு பெயரிலும் தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தூத்துக்குடி மண்ணுக்கும் மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓட நினைக்கும் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரை கைது செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் சொத்துக்களை அரசுடமையாக்கி தூத்துக்குடியில் உயிர்ச்சூழலை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வேளாண் சார்ந்த திட்டங்களை கொண்டு வரவேண்டும். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15பேருக்கு அங்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணையை ஏற்காமல், தமிழக அரசே சிறப்பு விசாரணை குழுவை நியமித்து குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

சமூக செயற்பாட்டாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குணசீலன், மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து

M RamasamyJul 5, 2022 - 07:54:03 AM | Posted IP 162.1*****

A large scale industry is going to sell its properties because of mis management of dist admin and public agitation. The demand of taking property by govt and others are immoral. A govt allowed shooting. U will not vote as and workout all over tamilnadu. Instead after closing factory there is previous enemity by som er people. So this kind of voices coming. They must know that public are not foolish to hear the those people voices. Thheir activities shows there will be no industry in Tuticorin. There will be no development in this region. No employment opportunities to educated youths. All parents are educating children's to send them for decent salary and handsome job whereas because of tuticorin agitators of small group they will not repay loans and think about welfare. Govt of India and state govt should take stringent efforts against such unlawful activities

M RamasamyJul 5, 2022 - 07:54:02 AM | Posted IP 162.1*****

அன்புJun 28, 2022 - 03:04:26 PM | Posted IP 162.1*****

வரவேற்க தகுந்தது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.

மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory