» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை!

திங்கள் 27, ஜூன் 2022 3:58:44 PM (IST)



கயத்தார் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே  தெற்கு செவல்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனு "எங்கள் கிராமத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ள நிலையில் மேலும் ஒரு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதன் அருகே பிரசித்திபெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மதுக்கடையால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே டாஸ்மாக் மதுபான கடையை நகருக்கு வெளியே வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் கலால்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 


மக்கள் கருத்து

கொத்தடிமைJun 27, 2022 - 09:09:35 PM | Posted IP 162.1*****

அரசுக்கு வருமானம் வேணும்ல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory