» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்து: மாணவன் பலி : 7பேர் படுகாயம்!

திங்கள் 27, ஜூன் 2022 11:26:50 AM (IST)

செய்துங்கநல்லூர் அருகே பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆட்டோவில் வந்த 7 குழந்தைகள் காயம் அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் பாளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியில் பயிலும் 8 மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு ஆட்டோ பள்ளிக்கு சென்றது. ஆட்டோவில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை வெட்டியம்பந்தி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் செல்வநவீன் (5), முத்தாலங்குறிச்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் நவீன்குமார் ( 5), மகள்கள் முகிலா (11), ராகவி (6), பார்வதி நாதன் என்பவரது மகள் குணவதி (4), நல்லத்தம்பி மகன் இசக்கிராஜா( 5), ஆறுமுககுமார் என்பவரது மகள் அபிராமி, மகன் அரிவரதன் ஆகிய 8 பேரும் ஆட்டோவில் சென்றனர்.

ஆட்டோ அனவரதநல்லூர்-வசவப்பபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த 8 குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் மாணவன் செல்வ நவீன் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற 7 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முறப்பநாடு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 7 மாணவர்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பலியான மாணவன் செல்வ நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த உடன் ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஆட்டோவை வழக்கமாக ஓட்டி வரும் டிரைவருக்கு பதிலாக புதிதாக ஒருவர் ஆட்டோவை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ கவிழ்ந்தது எப்படி? டிரைவர் செல்போன் பேசிக்கொண்டு வந்தாரா? என்பது குறித்த விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory