» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
வியாழன் 23, ஜூன் 2022 4:44:13 PM (IST)

தூத்துக்குடியில் பிரதான சாலைகளின் நடைபாதைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சாலையோரங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி 4வது ரயில்வே கேட் முதல் அண்ணா நகர், விவிடி சிக்னல் வரையிலும் பல்வேறு இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள், மேற்கூரைகள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் இன்று தி்டீர் ஆய்வு செய்து, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட கடைகள், விளம்பர பலகைகள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பணிகளில் மாநகராட்சி உதவி ஆணையர் சரவணன், பொறியாளர் சுரேஷ் பொன்னையா, சுகாதார அலுவலர் ஸ்டான்லி பாக்கியநாதன், உதவி செயற்பொறியாளர் ஸ்டான்லி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
TN 69Jun 24, 2022 - 08:29:21 PM | Posted IP 162.1*****
தமிழ் சாலையில் அதாவது பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் பழையதுறைமுகம் வரை அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளையும் தேவர்புரம் ரோடு முதல் பழைய போஸ்ட் ஆபீஸ் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட முடியாது, உங்களால்
freindJun 24, 2022 - 10:06:30 AM | Posted IP 162.1*****
Super do it every week
மேலும் தொடரும் செய்திகள்

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர்: ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு
செவ்வாய் 28, ஜூன் 2022 8:59:01 PM (IST)

TN 69Jun 24, 2022 - 08:29:21 PM | Posted IP 162.1*****