» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரும்பு கம்பியால் தாக்கி இளைஞர் கொடூர கொலை
வியாழன் 23, ஜூன் 2022 11:16:44 AM (IST)
கயத்தாறு அருகே தலையில் இரும்பு கம்பியால் தாக்கி இளைஞரை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தளவாய்புரம் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் உள்ள கோவிலுக்கு பின்புறத்தில் ஆண் சடலம் கிடப்பதாக கயத்தார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அங்கு சுமார் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர், தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர் யார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிணையை மீறி குற்றத்தில் ஈடுபட்டவருக்கு சிறை
புதன் 29, ஜூன் 2022 6:34:18 PM (IST)

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)
