» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை!

வியாழன் 23, ஜூன் 2022 10:34:10 AM (IST)

விளாத்திகுளம் அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமம், கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மகள் ரேவதி (21), இவரை கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து  மூக்காண்டி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இளவரசு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Thoothukudi Business Directory