» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாத்திரக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

வியாழன் 23, ஜூன் 2022 10:27:48 AM (IST)

உடன்குடியில் பாத்திரக்கடையில் பூட்டை உடைத்து ரூ.75ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி, முருகன் காலனியை சேர்ந்தவர் இசக்கி மகன் முத்துக்குமார் (42). இவர் உடன்குடி மெயின் பஜாரில் பாத்திரம் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையில் உள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பித்தளை குத்துவிளக்கு, 29 சூலாயுதங்கள், 19 அலுமினிய பாத்திரங்கள் ஆகியவற்றை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். இதுகுறித்து முத்துக்குமார் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory