» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ் பாடத்தில் சாதனை: மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

வியாழன் 23, ஜூன் 2022 7:56:50 AM (IST)

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் ௧௦௦ மதிப்பெண் பெற்ற மாணவி துர்காவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் திருச்செந்தூர் மாணவி துர்கா தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவி துர்காவிற்கு தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாராட்டி ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டுவிட்டர் மூலம், மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ் மாணவி துர்காவுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாணவியை நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியை பாராட்டினார்.


மக்கள் கருத்து

kumarJun 23, 2022 - 02:17:28 PM | Posted IP 108.1*****

avar paditha Palliyin peyarai yen solla mattengrenga?? Sri Kanchi Sankara School.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory