» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3பேர் காயம் : எஸ்பி மீட்பு பணி; சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்!
புதன் 22, ஜூன் 2022 4:43:28 PM (IST)

தூத்துக்குடியில் கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3பேர் காயம் அடைந்தனர். அவர்களை எஸ்பி பாலாஜி சரவணன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான செல்லத்துரை மனைவி தமிழ்தங்கம் (62), அன்பழகன் மனைவி முத்துசெல்வி (49) மற்றும் கார் ஓட்டுநரான மதுரை காளவாசல் ஜாபர் அலி மகன் சுல்தான் (39)ஆகியோர் காரில் மதுரையிலிருந்து தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது கார் தூத்துக்குடி துறைமுக சாலையில் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயனம் செய்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் மற்றும் தென்பாகம் காவல் நிலைய போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிணையை மீறி குற்றத்தில் ஈடுபட்டவருக்கு சிறை
புதன் 29, ஜூன் 2022 6:34:18 PM (IST)

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)
