» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றை தலைமை : தெற்கு மாவட்ட அதிமுக தீர்மானம்!
திங்கள் 20, ஜூன் 2022 5:49:14 PM (IST)

அ.இ.அதிமுக-வில் எடப்பாடி கே. பழனிசாமியில் ஒற்றைத் தலைமை அமைய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் வரவேண்டும், அது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தான் வரவேண்டும் அதையே அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் விரும்புகின்றனர் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 20.06.2022 அன்று காலை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்விற்கு அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்து மாவட்ட நிர்வாகிகள் அவர்களின் கருத்துக்களை கூறினர் அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 100 சதவிகீதம் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் பொதுக்குழுவில் திட்டமிட்டபடி பங்கேற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்டக் கழக இணைச் செயலாளர் செரினா பாக்கியராஜ், துணைச் செயலாளர்கள் எம்.வசந்தா, ஏ.சந்தனம், பொருளாளர் அமலிராஜன், ஓன்றியக் கழக செயலாளர்கள் இராமச்சந்திரன், காசிராஜன், தாமோதரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், சௌந்தரபாண்டி, பகுதிக் கழக செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, சேவியர், முருகன், நகரக் கழகச் செயலாளர்கள் டாக்டர். காயல் மௌலானா, மகேந்திரன், பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், சோமசுந்தரம், செந்தமிழ்சேகர், கிங்சிலி, உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துக்கொண்டனர்.
மக்கள் கருத்து
ராமநாதபூபதிJun 21, 2022 - 10:33:14 AM | Posted IP 162.1*****
கூவத்தூர்ல எடப்பாடி பழனிசாமியை அம்போன்னு விட்டுட்டு ஓடுற பஸ்ல இருந்து இறங்கி பன்னீர்செல்வம் தான் கழகத்தை காக்கவந்த வீரனு சொல்லி பேட்டியெல்லாம் கொடுத்துட்டு இன்னைக்கு அதே கூவத்தூர் போற பஸ்லயே ஏறுறிங்களே. நீங்கல்லாம் யாரு சார்.இதுக்குதான் அந்த அம்மா உங்களையெல்லாம் ஊமையா வைச்சிருந்துச்சா சார்?
மேலும் தொடரும் செய்திகள்

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர்: ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு
செவ்வாய் 28, ஜூன் 2022 8:59:01 PM (IST)

அரிJun 21, 2022 - 02:24:54 PM | Posted IP 162.1*****