» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை!
சனி 18, ஜூன் 2022 3:41:38 PM (IST)
தூத்துக்குடி மாநகாரட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மீறி சாலையோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்போர் மீது காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதாகைகள் அகற்றப்படும். மேலும், மாநகராட்சி சார்பிலும், அரசு சார்பிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை மறைத்து பதாகைகள் வைப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலீத்தீன் பைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட பாலீத்தீன் பைகள் கழிவுநீர் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ஆங்காங்கே வீசப்படும் பாலீத்தீன் பைகளை கால்நடைகளை சாப்பிடுவதால் அவை உயிரிழக்கும் சூழல் உள்ளது.எனவே, தூத்துக்குடி மாநகாரட்சிப் பகுதியில் மஞ்சள் பைகள்,பேப்பரால் செய்யப்பட்ட பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு தடை செய்யப்பட்ட பாலீத்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய இளைஞர் கைது
புதன் 29, ஜூன் 2022 5:27:11 PM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி : சகோதரன் காயம்
புதன் 29, ஜூன் 2022 7:59:27 AM (IST)

கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும்: இந்து முன்னணி சார்பில் பிரசார பயணம் தொடக்கம்
புதன் 29, ஜூன் 2022 7:47:00 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.3.60 கோடி உண்டியல் வருவாய்
புதன் 29, ஜூன் 2022 7:40:50 AM (IST)

நெய்தல் விழா ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை
செவ்வாய் 28, ஜூன் 2022 9:14:21 PM (IST)

தூத்துக்குடியில் நடைபாதையை சேதப்படுத்தி பேனர்: ஒப்பந்தக்காரர் கடைக்கு சீல்வைப்பு
செவ்வாய் 28, ஜூன் 2022 8:59:01 PM (IST)
