» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது.

திங்கள் 16, மே 2022 10:07:15 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டை காலி செய்வது தொடர்பான பிரச்சனையில்  பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:  தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் இனமுத்து மகன் பெரியநாயகம் (22). இவரது அப்பாவுக்கு சொந்தமான அங்குள்ள வீட்டில் ஒரு பெண் ஒத்திக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் பெரியநாயகம் அந்தப் பெண்ணிடம் வீட்டை காலி செய்யும்படி குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெரியநாயகம் மற்றும் அவரது உறவினரான லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் மாரிமுத்து (28) ஆகிய இருவரும் சேர்ந்து நேற்று அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் தகராறு செய்து தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் வழக்கு பதிவு செய்து பெரியநாயகம் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory