» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீடு இடிந்து ஒருவர் பரிதாப சாவு

ஞாயிறு 15, மே 2022 8:06:06 PM (IST)

தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி டூவிபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சுரேஷ் (40). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுடலைகனி. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு  முன்பு சுடலை கனி இறந்துவிட்டார். இதை தொடர்ந்து சுரேஷின் இரண்டு குழந்தைகளும் நெல்லையில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்று விட்டனர் இதனால் சுரேஷ் மட்டும் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் சுரேஷ் அவர் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சுரேஷ் பிணமாக மீட்டனர். பின்னர், அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

தொடரும் சம்பவம்

தூத்துக்குடியில் சமீபகாலமாக 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் இடிந்து வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அண்ணாநகரில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் தாய் மகள் பரிதாபமாக இறந்தனர். தற்போது இந்த சம்பவம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ஒருவன்மே 15, 2022 - 08:36:32 PM | Posted IP 162.1*****

கடவுளே..இந்நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory