» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன் பிடிக்கச் சென்றவர் மூச்சுத்திணறி பரிதாப சாவு

ஞாயிறு 15, மே 2022 8:00:23 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மீன் மீன் பிடிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீ மூலக்கரை கிராமம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பாக்யராஜ் (34). இவர் அங்குள்ள கஸ்பா குளத்தில் மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த  ஸ்ரீவைகுண்டம்  காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணராஜ் சம்பவ இடத்துக்கு சென்று குளத்தில் மிதந்து கொண்டிருந்த பாக்யராஜ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ஸ்ரீ வைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory