» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆலங்குளத்தில் ரூ.11.33 கோடியில் அரசு மகளிர் கல்லூரி கட்டிடம் : அடிக்கல் நாட்டு விழா

சனி 14, மே 2022 5:05:20 PM (IST)



ஆலங்குளத்தில் ரூ.11.33 கோடி மதிப்பீட்டில் அரசு மகளிர் கல்லூரி கட்டிடம் கட்டும் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.11.33 கோடியில் நிரந்தர கட்டிடம் அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆலங்குளம்- தென்காசி சாலையில் மலைக்கோவில் அடிவாரத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ஞான திரவியம் எம்.பி., மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

அரசு மகளிர் கல்லூரியானது 3 தளங்களுடன் 50 ஆயிரத்து 416 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இங்கு வகுப்பறைகளுடன் அலுவலக அறை, பதிவு வைப்பறை, முதல்வர் அறை, மாணவர் கூட்டுறவு பண்டகசாலை, உடல் நல மையம், நூலகம், ஆய்வகம், கருத்தரங்கு கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், கல்லூரி கல்வி இணை இயக்க உதவி இயக்குனர் மயிலம்மாள், செயற்பொறியாளர் சத்யவாகேஸ்வரன், கல்லூரி முதல்வர் கலைமகள், மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றிய குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் ஒன்றியக்குழு தலைவர் காவேரி சீனித்துரை, கழுநீர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், தி.மு.க. ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ராதா, கணபதி, ஆலங்குளம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நிக்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory