» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழப்பு

சனி 14, மே 2022 11:04:39 AM (IST)

நாலாட்டின்புதூர் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மூச்சுத்தினறல் ஏற்பட்டு விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகேயுள்ள சிதம்பரம்பட்டி கிராமம், கீழத் தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் வெள்ளத்துரை (68). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ரோஜாபூ, மல்லிகை பூ செடிகள் பயிரிட்டுள்ளார். நேற்று செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.


மக்கள் கருத்து

ஐயோ கடவுளேமே 14, 2022 - 02:32:35 PM | Posted IP 162.1*****

மல்லிகை பூ , ரோஜாப்பூல விஷ மருந்தா?பெண்கள் தலையில் வைக்கும்போது வாசனை எப்படி இருக்கும் ? ரொம்பநாள் தெரியாமல் போச்சே .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory