» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் ஆட்டோ மோதல்: பெண் பலி - குழந்தை உட்பட 2பேர் காயம்!
சனி 14, மே 2022 10:40:54 AM (IST)
திருச்செந்தூர் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். 1 வயது குழந்தை உட்பட 2பேர் காயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டம், தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மனைவி சுப்புலட்சுமி (48). இவர் தனது மகன் மாயாண்டி (24), மற்றும் பேத்தி ஹன்சிகா (1) ஆகியோருடன் பைக்கில் திருச்செந்தூர் சென்று காெண்ருந்தார். பைக்கை மாயாண்டி ஓட்டிச் சென்றார். குமாரபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த ஆட்டோ பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கில் சென்ற மூவரும் பலத்த காயம் அடைந்தனர். சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மாயாண்டி மற்றும் குழந்தை ஹன்சிகா இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலூகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து, ஆட்டோவை ஓட்டி வந்த தூத்துக்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்த சித்திரைவேல் மகன் முத்துகுமார் (51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்து கடவுளை இழிவுபடுத்தியவரை கைது செய்யக் கோரி நிர்வாண போராட்டம்: இ.தே.க. தலைவர் கைது!
திங்கள் 16, மே 2022 12:28:05 PM (IST)

கண்டெய்னர் லாரி - கார் மோதல்: டிராவல்ஸ் அதிபர் பலி - தூத்துக்குடியில் சோகம்!
திங்கள் 16, மே 2022 10:58:01 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 2 பேர் கைது.
திங்கள் 16, மே 2022 10:07:15 AM (IST)

திருச்செந்தூா் கோயில் ராஜகோபுரத்தில் ஏறி நின்ற இளைஞரால் பரபரப்பு
திங்கள் 16, மே 2022 10:05:20 AM (IST)

கருப்பட்டி தொழிற்கூடங்களுக்கு தீவைப்பு - ரூ.8 லட்சம் சேதம்
திங்கள் 16, மே 2022 10:01:34 AM (IST)

தூத்துக்குடியில் வீடு இடிந்து ஒருவர் பரிதாப சாவு
ஞாயிறு 15, மே 2022 8:06:06 PM (IST)
