» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆட்சியர் தொடக்கி வைத்தார்!

சனி 14, மே 2022 10:07:48 AM (IST)ஆத்தூர் பகுதியில் பிளாஸ்டிக் தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்துவதற்கான விழிப்புணர்வினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தொடக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட வீரவாகு திருமண மண்டபத்தில் கிராம உதயம் சார்பில் பிளாஸ்டிக் தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடக்கி வைத்து பேசியதாவது: நான் மாவட்ட ஆட்சியர் அல்ல. மாவட்ட அரசு முதன்மை அலுவலர். மாவட்ட ஆட்சியராக விளங்க வேண்டும் என்றால் அந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் சிறந்து விளக்க வேண்டும். மாவட்டம் சிறந்து விளங்கினால்தான் நான் மாவட்ட ஆட்சியராக இருக்க முடியும். 

தூத்துக்குடி மாவட்டம் சிறந்து விளங்குவதற்கு காரணம் பொதுமக்களும் தொண்டு நிறுவனங்களும்தான். இவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு விதமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதால் மாவட்ட நிர்வாகம் பல நல்ல சீரிய திட்டங்களை எளிதாகவும் மக்களுக்கு கொண்டு சேரும் விதமாகவும் செயல்படுத்த முடிகிறது. நான் பார்த்து ஆச்சரியப்பட்ட தொண்டு நிறுவனங்களிலே கிராம உதயம் தொண்டு நிறுவனம்தான். நான் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கும் அதை தோற்றுவித்தவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 23 ஆண்டுகள் தொடர்ந்து மக்களுக்கு தொண்டு செய்து, 7.75 இலட்சம் மக்கள் உள்ளடக்கிய தொண்டு நிறுவனம் இந்த கிராம உதய நிறுவனம் ஆகும். இந்தொண்டு நிறுவனத்தின் வாயிலாக 17 நபர்களுக்கு கண்புறை சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஏரல் வட்டத்துக்குட்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு தொண்டுகள் செய்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் ஒன்றறை ஆண்டு காலமாக இந்த மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தும் இத்தொண்டு நிறுவனத்தை பற்றி தெரியாமல் இருந்தது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் கிராம உதயம் தொண்டு நிறுவனத்தை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அறிமுகப்படுத்தினார்கள். முத்தாலங்குறிச்சி காமராசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாமிரபரணி கரையோரங்களை சீரமைத்து மரங்கள் நட்டு அடர் காடுகள் உருவாக்கும் திட்டத்திற்காக கிராம உதயம் தந்த மரக்கன்றுகளை நட்டு புதர்களை அகற்றி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியினை மாவட்ட நிர்வாகம் ஆண்டு முழுவதும் செயல்படுத்தும்.

தமிழ்நாட்டிலேயே தாமிரபரணி ஆற்றில் மரங்கள் நட்டு தூய்மைப்படுத்துவோம். 9 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். இன்னும் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு 10 லட்சமாக மாற்ற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு லட்சம் மரக்கன்றுகளை டிசம்பர் மாதத்pற்குள் நட வேண்டும். மீண்டும் மஞ்சப்பை பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை நீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலே முதல் முறையாக கிராம உதயம் 5000 மஞ்சப்பைகளை வழங்கியுள்ளது. இன்றைய தினம் 5000 மரக் கன்றுகளை நட்டு காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். ஆத்தூர் நகரிலே இந்த நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என ஆட்சியர்  பேசினார்.

அதனைத்தொடர்ந்து ஏரல் வட்டம் சூலைவாய்க்கால் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டையினை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் ஸ்ரீவைகுண்டம் வட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை பாதுகாத்து கண்காட்சி அமைத்திடும் பொருட்டு அருங்காட்சியகம் அமையவிருக்கும் இடத்தினை ஆட்சியர் பார்வையிட்டார்கள். மேலும் கீழ தட்டப்பாறை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் 100 நாள் வேலையில் பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டதோடு கீழ தட்டப்பாறை ஊராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். மேல தட்டப்பாறையில் சிப்காட் வாயிலாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூன்றாவது யூனிட் அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), புஹாரி (திருச்செந்தூர்), சிறப்பு வருவாய் கோட்டாட்சியர் (சிப்காட்) லதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, வட்டாட்சியர்கள் அ.சுவாமிநாதன் (திருச்செந்தூர்), கண்ணன்(ஏரல்), செல்வக்குமார்(தூத்துக்குடி), ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கையன் (சூலைவாய்க்கால்), சங்கரகணேஷ்(ஆதிச்சநல்லூர்), பத்மா (கீழ தட்டப்பாறை), ஆத்தூர் பேரூராட்சி தலைவர் கமால்தீன், மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன், நிறுவனர், இயக்குநர் கிராம உதயம் சுந்தரேசன், முத்தாலங்குறிச்சி எழுத்தாளர் காமராசு, ஆத்தூர் பேரூராட்சி துணை தலைவர் மகேஷ்வரி முருக பெருமாள், வழக்கறிஞர், ஆலோசனைக்குழு உறுப்பினர் கிராம உதயம் புகழேந்தி பகத்சிங், மேலஆழ்வார்தோப்பு தன்னார்வ தொண்டர் (சிறப்பு பொறுப்பாளர்) கிராம உதயம் ராமச்சந்திரன், தன்னார்வ தொண்டர் (பகுதி பொறுப்பாளர்) கிராம உதயம் மேலஆழ்வார்தோப்பு ஆரியநாச்சியார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory