» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை இழந்தது அதிமுக - நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி!

வியாழன் 12, மே 2022 3:22:51 PM (IST)தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அதிமுக உறுப்பினர்கள் 9பேர் கட்சி மாறி வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 17 வார்டுகளில் 12 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. கோவில்பட்டியை சேர்ந்த சத்யா என்பவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 12 அதிமுக உறுப்பினர்கள் இருந்தனர். 5 திமுக உறுப்பினர் இருந்தனர். தற்போது 9 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவுக்கு சென்று விட்டனர். இதனால் திமுகவின் பலம் அதிகரித்தது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்திற்கு மொத்தமுள்ள 17 உறுப்பினர்களில் அதிமுகவைச் சேர்ந்த சத்யா மற்றும் உறுப்பினர்கள் பேச்சியம்மாள், பிரியா ஆகிய மூவரைத் தவிர்த்து 14 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் முழுமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி காலியாக உள்ளதாக ஆட்சியர் அறிவித்தார்.  

அதிமுகவைச் சேர்ந்தவரும், துணைத் தலைவருமான செல்வக்குமார் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். பின்னர் உறுப்பினர்கள் பலரும் கட்சி மாறினர். நம்பிக்கையில்லா தீரமானம் வெற்றி பெற்றது குறித்து துணைத் தலைவர் செல்வகுமார் கூறும்போது "தமிழகத்தில் விடியல் அரசு, திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கு பரிசாக உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளனர் என்றார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து

வழி போக்கன்மே 13, 2022 - 05:27:26 PM | Posted IP 162.1*****

இதற்கு பெயர்தான் எச்சை.

Makkalமே 12, 2022 - 04:52:06 PM | Posted IP 162.1*****

Ithukku vera pannalam natharikala.

makkalமே 12, 2022 - 04:44:10 PM | Posted IP 162.1*****

தேர்தல் முடிந்த உடனே கட்சி மாறுபவர்கள் பதவியை பறிக்க வேண்டும். மக்களும் அடுத்த தடவை அவர்களை நிராகரிக்க வேண்டும்.

தூத்துக்குடிமே 12, 2022 - 03:33:47 PM | Posted IP 162.1*****

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மீது ஏதேனும் புகார் உள்ளதா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory