» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் : தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

வியாழன் 5, மே 2022 10:45:22 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் 85 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வு மையங்களில் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் 85 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டு தெரிவிக்கையில் "தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 05.05.2022 முதல் 28.05.2022 வரை 08 நாட்களும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 10.05.2022 முதல் 31.05.2022 வரை 07 நாட்களும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 06.05.2022 முதல் 30.05.2022 வரை 06 நாட்களும் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 203 பள்ளிகளிலும் பயிலும் 9407 மாணவர்களும் 10963 மாணவிகளும் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வெழுதுகின்றனர். 

204 பள்ளிகளில் பயிலும் 9863 மாணவர்களும் 11158 மாணவிகளும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வெழுதுகின்றனர். 309 பள்ளிகளில் பயிலும் 11968 மாணவர்களும் 12031 மாணவிகளும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதுகின்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து கல்வி அலுவலர்களும் தேர்வுப் பணியில் முழுப் பொறுப்பு ஏற்கின்றார்கள். தேர்வு மையங்களுக்கான முதன்மைக் கண்காணிப்பாளர்களாகப் பிற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்று செயல்படுகின்றார்கள்.

அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் மற்றும் மூத்த ஆசிரியர் ஒருவர் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களாக செயல்படுகிறார்கள். முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களாக மேல்நிலை / இடைநிலை பொதுத் தேர்வில் செயல்படுகிறர்கள். தேர்வு மையங்களுக்கான அறைக் கண்காணிப்பாளர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கண்காணிப்பு அலுவலர் மாநில திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை. கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உதவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதவி விட்ட அலுவலர்.மேல்நிலை தேர்வுக்கு 88 தேர்வு மைங்களிலும் 44 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 22 வழித்தட அலுவலர்கள் 88 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 88 துறை அலுவலர்கள் 155 பறக்கும் படை உறுப்பினர்கள் 1300 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இத்தேர்வில் 170 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இடைநிலை தேர்வுக்கு 106 தேர்வு மைங்களிலும் 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 22 வழித்தட அலுவலர்கள் 106 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 106 துறை அலுவலர்கள் 165 பறக்கும் படை உறுப்பினர்கள் 1494 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் 114 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான வசதி அரசு நிர்ணயித்த விதியின்படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்  தெரிவித்தார்.


இதேபோன்று  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை), பிளஸ்-1 தேர்வு 9-ந் தேதியும் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பொதுத் தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் தயாராகி உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி தேர்வை கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 214 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 55 பேரும், திருச்செந்தூர் கல்வி மாவட்டடத்தில் 5 ஆயிரத்து 730 பேரும் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 999 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  பிளஸ்-1 தேர்வை கோவில்பட்டியில் 6 ஆயிரத்து 130 பேரும், தூத்துக்குடியில் 9 ஆயிரத்து 605 பேரும், திருச்செந்தூரில் 5 ஆயிரத்து 286 பேரும் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 21 பேர் 85 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory