» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி ஆசிரியர்களுக்கு ஜன.22ம் தேதி விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

வியாழன் 20, ஜனவரி 2022 5:29:42 PM (IST)

தமிழகத்தில் வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் ஜனவரி 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,  வருகிற ஜனவரி 22 ஆம் தேதி (சனிக்கிழமை) ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

வாரத்தின் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால்,  வருகிற ஜனவரி 22 (சனிக்கிழமை) அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory