» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக புகையிலை, மது விற்பனை: 15 பேர் கைது

வியாழன் 20, ஜனவரி 2022 4:17:43 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக  புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என  15 பேர் கைது செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று (19.01.2022) மேற்கொண்ட ரோந்துப் பணியில் புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என  திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 2 வழக்குகளும்,  கோவில்பட்டி உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 1 வழக்கும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 4 வழக்குகளும், மதுவிலக்கு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் ஆக மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சட்டவிரோதமாக  மதுபாட்டில்கள் விற்பனை செய்த 9 பேரும், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1,412 புகையிலைப் பாக்கெட்டுகள் மற்றும் 23 மதுபாட்டில்கள்   பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory