» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் உதயநிதி பெயரில் இருந்த கடை அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

வியாழன் 20, ஜனவரி 2022 3:25:03 PM (IST)தூத்துக்குடியில் உதயநிதி உதவியால், மாற்றுத்திறனாளி கட்டிய கடையின் சுற்றுச்சுவரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். 

தூத்துக்குடி லயன்ஸ்டவுன் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஜஸ்டின். சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து இருசக்கர வாகனத்திலேயே சென்னை வரை பயணித்து திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவை சந்தித்து தனக்கு ஏதேனும் வேலைவாய்ப்பு அளித்த உதவுமாறு மனு அளித்தாா். இதையடுத்து, தூத்துக்குடியில் பழச்சாறு கடை அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின், இளைஞரணி துணைச் செயலா் எஸ். ஜோயல் மூலம் ராஜாஜி பூங்கா அருகே கடை அமைக்க ஏற்பாடு செய்துகொடுத்தாா்.

மேலும், அந்தக் கடைக்கு குடிநீா் இணைப்பு மற்றும் மின் இணைப்பு பெறுவதற்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் ஏற்பாடு செய்தாா். இந்நிலையில், பழச்சாறு கடையை சுற்றி ஜஸ்டின் சுவா் அமைத்திருந்தாா். இதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு வந்த புகாரை அடுத்து மாநகராட்சி உதவி ஆணையர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஜூஸ் கடையை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து

தமிழன்Jan 20, 2022 - 10:05:31 PM | Posted IP 108.1*****

ஆளுங்கட்சி தலைவர்களின் பெயர்களை வைத்துக் கொண்டால் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் போலும். கடையை புல்டோஸர் மூலம் அகற்றிய மாநகராட்சி நிவராகத்துக்கு பாராட்டுக்கள்.

Jan 20, 2022 - 04:30:59 PM | Posted IP 108.1*****

அரசியல்வாதிகளை நம்பி இப்படி போனால் கடைசியில் இப்படித்தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory