» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது : பரபரப்பு தகவல்

புதன் 19, ஜனவரி 2022 8:19:09 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி தாளமுத்து நகர், சமீர் வியாஸ் நகரை சேர்ந்த லூயிஸ் பெட்டின் மகன் அலெக்ஸ் (31). கட்டிடத் தொழிலாளியான இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 13ம்தேதி அதிகாலை தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் அடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற சிப்காட் போலீசார், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவந்தனர். 

அலெக்ஸ் கொலை வழக்கில் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்சன் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தலைமறைவான ஜான்சன் உள்ளிட்டோரை தேடிவந்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய ஜான்சனின் நண்பரான தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த ஜெயசீலன் (34) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்தன. 

அதன் விவரம் வருமாறு: கடந்த மாதம் ஜான்சனின் கார் கண்ணாடியை அலெக்ஸ் உடைத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஜான்சனை அலெக்ஸ் சரமாரியாகத் தாக்கினாராம். இதனால் தீராத ஆத்திரத்தில் இருந்துவந்த ஜான்சன் அலெக்சை சம்பவத்தன்று கொலை செய்துள்ளார். இதில் ஜான்சனை சம்பவ இடத்திற்கு ஜெயசீலன் தனது பைக்கில் அழைத்து சென்றதோடு கொலை நடந்த பிறகு அங்கிருந்து தப்பிச்செல்ல அழைத்து சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து ஜெயசீலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory