» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பெண் ஆன்லைனில் இழந்த ரூ.1 லட்சம் பணம் மீட்பு!

செவ்வாய் 18, ஜனவரி 2022 8:57:29 PM (IST)

தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஆன்லைனில் இழந்த ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவருடைய மனைவி ஆனந்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போன் எண்ணுக்கு வங்கி தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்து உள்ளது. அதனை பார்த்த ஆனந்தி, அந்த குறுஞ்செய்தியில் இருந்த ஆன்லைன் இணைப்பில் சென்று தனது வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவு செய்து உள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் மோசடியாக எடுக்கப்பட்டு உள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆனந்தியின் வங்கி கணக்கில் இருந்து பணம், பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் பிளிப்கார்ட் நிறுவன அதிகாரியை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தனர். 

தொடர்ந்து பணத்தை மீண்டும் ஆனந்தியின் வங்கி கணக்குக்கு அனுப்ப அறிவுறுத்தினர். இதனால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து மீண்டும் ரூ.1 லட்சம் பணம் ஆனந்தியின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால் இழந்த பணம் முழுமையாக மீட்கப்பட்டது. இது குறித்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கூறும் போது, பொதுமக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் தேவை இல்லாத லிங்குகளை திறக்க வேண்டாம் என்றும், வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.


மக்கள் கருத்து

கே.கணேசன்Jan 19, 2022 - 04:06:37 PM | Posted IP 108.1*****

காவல் துறை தலைமை மற்றும் காவல் துறையினர் அனைவருக்கும் மிக்க நன்றி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory