» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்பனை: பிரபல ரவுடி உட்பட 3 பேர் கைது!

செவ்வாய் 18, ஜனவரி 2022 12:28:16 PM (IST)



செய்துங்கநல்லூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 1.25 கிலோ கஞ்சா மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர்  சதீஷ் தலைமை காவலர் குணசேகரன், முதல் நிலை காவலர்கள் வேம்பு ராஜ், கைலேயங்கிரிவாசன், ஆனந்தராஜ், முத்துக்குமார், நாராயணசாமி, காவலர்கள் ஜான் அந்தோணி ராஜ் மற்றும் பட்டவராயன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது  செய்துங்கநல்லூர் சுடுகாட்டுப் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த வி.கோவில்பத்து, மந்திரம் மகன் சுந்தரம் (எ) கோட்டை (22), கொங்கராயகுறிச்சி பழனி மகன் வேல்பாண்டி (20), அய்யமார் தெரு கொம்பையா மகன் கிருஷ்ணமூர்த்தி (19), ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

உடனடியாக மேற்படி போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சுந்தரம் (எ) கோட்டை என்பவர் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கு உட்பட 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory