» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் விழா: எஸ்பி பங்கேற்பு

வெள்ளி 14, ஜனவரி 2022 2:16:59 PM (IST)தூத்துக்குடி கூட்டாம்புளியில்  உள்ள ‘அன்பு உள்ளங்கள்" ஆதரவற்றோர் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுடன் எஸ்பி ஜெயக்குமார் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி அன்னை தெரஸா நகரில் ‘அன்பு உள்ளங்கள்” என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் என 150க்கும் மேற்பட்ட ஆதவற்றோர்கள் உள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தமிழர் திருநாளான இன்று (14.01.2022) தைப்பொங்கல் விழாவை மேற்படி ‘அன்பு உள்ளங்கள்” ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார்.

அப்போது  அவர் பேசுகையில், "இந்த பொங்கல் விழா தமிழர்களின் பாராம்பரிய திருவிழாவாகும். இத்திருவிழா விவசாயத்திற்கு மரியாதை செய்ய உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழாவாகும். கடந்த வருடம் போன்று இந்த வருடமும் இந்த பொங்கல் விழாவை உங்களுடன் சமத்துவ பொங்கல் வைத்து, புத்தாடைகள் வழங்கி  கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கு உதவி செய்ய காவல்துறையாகிய நாங்கள் இருக்கிறோம் என அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள் கூறி கனிவுடன் உரையாடி அங்கிருந்த அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஆதவரற்றோர் இல்ல நிர்வாகிகள் விஜயா சத்யா சாமுவேல், பொன்சீலி, நிர்வாக உதவியாளர் தங்க தீபா, சமூக ஆர்வலர் ராஜா  ஸ்டாலின் மற்றும் காப்பக பணியாளர்கள் மற்றும் காப்பகத்தில் உள்ளவர்கள்  கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory