» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வியாழன் 13, ஜனவரி 2022 9:00:16 PM (IST)

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு காலை விசுவரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன.

மாலையில் சொர்க்கவாசலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பரமபத வாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக வைகுண்டபதி பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷமிட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து ராப்பத்து விழா தொடங்கியது. தினமும் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Thoothukudi Business Directory