» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது!

வியாழன் 13, ஜனவரி 2022 4:44:30 PM (IST)

கோவில்பட்டியில் வீட்டில் பதுக்கி இருந்த ரூ.1 லட்சம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி ராஜீவ்நகரில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதை தொடர்ந்து டிஎஸ்பி உதயசூரியன் உத்தரவின் பேரில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் ராஜீவ் நகர் 4-வது தெருவில் கருப்பசாமி மகன் காளிராஜ் (30) என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினா்.

அந்த வீட்டில் ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, அதில்  புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவ்நதது. இதையடுத்து அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த காளிராஜை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory