» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரவுடி கொடூர கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 13, ஜனவரி 2022 11:24:20 AM (IST)

தூத்துக்குடியில் ஜாமீனில் வந்த ரவுடியை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி, தாளமுத்துநகர், சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்தவர் லூயிஸ் பிரைட் மகன் அலெக்ஸ் (31). இவர் இன்று அதிகாலை சிப்காட் அருகில் உள்ள முருகேசநகரில் காட்டுப் பகுதியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தது சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் உள்ளது. இவர் தற்போது ஜாமீனில் இருந்துள்ளார். மேலும் அந்த பகுதியில் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் விவகாரத்தில் அவரை மர்ம நபர்கள் காட்டுப் பகுதிக்கு மது குடிக்க அழைத்துச் சென்று, பின்னர் அவரை கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் ஆகியோர் பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே மதுபாட்டில்கள் கிடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் சென்று கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட  அலெக்ஸ்க்கு இளவரசி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory