» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் 5 நாட்கள் தடை எதிரொலி: பக்தர்கள் குவிந்தனர்!

வியாழன் 13, ஜனவரி 2022 10:13:35 AM (IST)திருச்செந்தூர் கோயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவிலில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இதனால் திருச்செந்தூர் நகரம் ஸ்தம்பித்துள்ளது

கரோனா, ஒமைக்ரான் வைரஸ் தற்போது அதிக அளவு பரவ தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட திருநாட்கள் தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

மேலும், தைப்பூசம் அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவார்கள். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரை யாகவும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி தைப்பூசத் திருவிழா வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தாண்டு மாலையணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அனைவரும் திருச்செந்தூர் கோவிலில் குவிந்து வருகின்றனர். இதனால் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும், திருச்செந்தூர் நகர் பகுதி முழுவதும் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் வாகனங்களில் வந்த பக்தர்களின் கூட்டம் காணப்படுகிறது. பக்தர்கள் வந்த வாகனங்களால் நேற்று நகர் பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் திருச்செந்தூர் தாலுகா, கோவில் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து

kumarமே 16, 1642 - 09:30:00 AM | Posted IP 162.1*****

thevaiillatha ondru.... pakthargalai murai paduthi tharisanam seyya anumathikalam... online il pathivu seythu anumathikalam...... moththamaga kovilai mooduvathu etrukollamudiyathathu...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory