» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே வியாபாரிகளுக்கு அனுமதி!!

செவ்வாய் 11, ஜனவரி 2022 8:55:09 PM (IST)

நாசரேத் வாரசந்தையில்  இரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே வியாபாரிகளுக்கு பொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர் என பேருராட்சி செயல் அலுவலர் பால்ராஜ்  தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருவதையொட்டி தமிழக அரசு கட்டுபாடுகளை விதித்து முககவசம் அணிவதுடன் தடுப்பூசி அனைவரும் கண்டிப்பாக  செலுத்த  வேண்டும்  எனவும், பொது இடங்களில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி நாசரேத் வாரச்சந்தையில்  செவ்வாய்க்கிழமை   பேருராட்சி செயல் அலுவலர் பால்துரை தலைமையில் பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது சந்தையில் முககவசம் அணியாமல் கரோனா பரவும் வகையில் வந்த பொதுமக்கள் மற்றும்  வியாபாரிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனைவரும் 2ம் தவணை தடுப்பூசி வரை  செலுத்திருக்க  வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. சந்தை  வியாபாரிகள் கண்டிப்பாக அடுத்த வாரம் 2ஆம் தவனை  தடுப்பூசி  போட்டு அதற்கான சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே சந்தையில் கடை நடத்திட அனுமதிக்கப்படும்  என பேருராட்சி  செயல் அலுவலர் பால்ராஜ் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

adaminJan 12, 2022 - 07:17:11 AM | Posted IP 108.1*****

nalla comedy

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Thoothukudi Business Directory