» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கரோனா சிகிச்சை மையத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

சனி 8, ஜனவரி 2022 10:55:55 AM (IST)தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை பிரிவில் தயார் நிலையில் உள்ள படுக்கைகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு இன்று (08.01.2022) ஆய்வு செய்தார்கள். 

பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒமிக்ரான் நோய் தொற்று பரவலை எதிர்கொள்ளும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. அதில் 900க்கும் மேற்பட்ட ஆச்சிஜன் வசதி படுக்கைகளும் அடங்கியது. நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் 250 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் 35 நபர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பாதிப்பு குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். ஒமிக்ரான் மற்ற நாடுகளில் தற்பொழுது அதிக பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும், பரவும் தன்மை வேமாக இருக்கிறது. அதனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நோய் பரவுதலை தடுக்க பொதுமக்கள் ஒத்ததுழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுபாட்டு மையத்தை கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெபமணி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் முருகவேல், துணை இயக்குநர் சுகாதார பணிகள் பொற்செல்வன், முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ராமஜெயம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

kumarJan 8, 2022 - 01:12:53 PM | Posted IP 173.2*****

matra nadugalai oppidugayil inthiyavil corona thotru kuraivaga ullathu enbathe sariyana vakkiymaga irukkum......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory