» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நகைக்காக மூதாட்டி கொடூர கொலை : மர்ம நபர்கள் வெறிச் செயல் - எஸ்பி நேரில் விசாரணை!

வெள்ளி 7, ஜனவரி 2022 9:11:42 PM (IST)



குரும்பூர் அருகே மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளூவர் மேலத்தெருவை சேர்ந்தவர் காசி(எ) பெருமாள். இவரது மனைவி நாகூராள்(85). இவர்களது ஒரே மகள் மகள் இசக்கியம்மாளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவருக்கு ராஜா(37), பழனிச்சாமி(31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். காசி கடந்த 15 வருடங்களுக்கு முன் இறந்ததால் நாகூராள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு அவரது பேரன்கள் தினமும் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். இதேபோல் நேற்று காலை பழனிச்சாட்டி பாட்டி நாகூராளுக்கு சாப்பாடு கொண்டு வந்துள்ளார்.

அப்போது அவரது வீட்டின் கதவு உள்ளே பூட்டாமல் இருந்தது. பாட்டி நாகூராளை அழைத்தும் அவர் வெளியே வராததால் பழனிச்சாமி கதவை வேகமாக திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது பாட்டி நாகூராள் பற்கள் உடைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மகள் இசக்கியம்மாள் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்தனர். தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர் கொலை நடந்த இடத்தில் கைரேகைகளை பதிவு செய்தார். தொடர்ந்து மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

நாகூராள் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயின் மாயமாகி இருப்பதால் நகைக்காகத்தான் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மன்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam


Black Forest Cakes





Thoothukudi Business Directory