» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

செவ்வாய் 4, ஜனவரி 2022 3:06:22 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் 5,15,235 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.28 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் நியாய விலைக்கடையில் மாவட்டத்தில் உள்ள 5,15,235 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.28 கோடி மதிப்பில் 2022-ம் ஆண்டு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,297/- கோடி மதிப்பில் 1 கிலோ - பச்சரிசி, 1 கிலோ - வெல்லம், 50 கிராம் - முந்திரி, 50 கிராம் - திராட்சை, 10 கிராம் - ஏலக்காய், 500 கிராம் - பாசிபருப்பு, 100 கிராம் - நெய், 100 கிராம் - மஞ்சள்தூள், 100 கிராம் - மிளகாய் தூள், 100 கிராம் - மல்லித்தூள், 100 கிராம் - கடுகு, 100 கிராம் - சீரகம், 50 கிராம் - மிளகு, 200 கிராம் - புளி, 250 கிராம் - கடலைபருப்பு, 500 கிராம் - உளுத்தம்பருப்பு, 1கிலோ - ரவை, 1 கிலோ - கோதுமைமாவு, 500 கிராம் - உப்பு, ஒரு துணிப்பை மற்றும் ஒரு கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை இன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்கள். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 960 நியாய விலைக்கடைகள் மூலம் 5,15,235 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 28 கோடி மதிப்பில் 2022-ம் ஆண்டு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றி வருகிறார்கள். ரூ.4000 கொரோனா நிவாரண நிதி, பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண திட்டம், தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை, மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேளாண்மை, பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளில் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.   தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தினை பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான ஜெயராஜ் சாலை அருகில் உள்ள நியாய விலைக்கடை மற்றும் திரேஸ்புரம், ஹவுசிங் போர்டு நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பினை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் வழங்கினார்கள். முன்னதாக பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம், எப்போதும்வென்றான், குமாரரெட்டியாபுரம் வரை சென்ற அரசு பேருந்து வழித்தடத்தினை வெள்ளாரம் வரை நீட்டித்து சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் சிவமுத்துக்குமாரசுவாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், துணை இயக்குநர் போக்குவரத்து கழகம் (வணிகம்) சசிகுமார், வட்டாட்சியர்கள் நிஷாந்தினி(ஓட்டப்பிடாரம்), ஜஸ்டின் (தூத்துக்குடி), ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராகிம் சுல்தான், வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர்கள் ரமேஷ், காசிவிஸ்வநாதன், முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஆனந்தசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

kumarJan 6, 2022 - 01:36:13 PM | Posted IP 162.1*****

2500+1500=5000 eppo kudupeenga??

உண்மJan 5, 2022 - 10:01:36 AM | Posted IP 108.1*****

டலைவர் என்ன செய்ய சொல்றாரோ அதே mla க்கள் அதே செய்வார்கள், MLA க்கள் செய்வதெல்லாம் மக்கள் வழி அல்ல ..

கொத்தடிமைJan 5, 2022 - 10:00:10 AM | Posted IP 108.1*****

2000, 3000, 5000 ரூபாய் எல்லாம் தரமுடியாது போடா. இப்படிக்கு கொத்தடிமைகள் ... ஹா ஹா ..

MakkalJan 5, 2022 - 12:03:31 AM | Posted IP 173.2*****

5000எப்போப்போ குடுப்பீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory